Enakku piditha kavithai

ஜூலை 11, 2007

மஞ்சள் வெயில்
பூ
காதல்
மழை
பறவை
நீ
அல்லது
நான்
என்று எளிதாகச்
சொல்ல முடிவதில்லை.
மரணத்தை.

வா. மணிகண்டன்(kalachuvadu – july2007)


மறந்துவிட்டாயா அம்மா

ஜூன் 21, 2007

அம்மா என்ன சொன்னாய் நீ..
மறந்துவிட்டாயா?
மழை வேண்டுமென்று கேட்டேனே..
கையில் பிடித்து தருகிறேன்
விரலிடுக்கில் துளிகளை
நழுவ விட்டுவிடாதே என்றாயே..

விரல்களை இறுக்க குவித்து
கையேந்தியபடி இருக்கிறேன்..

எங்கே அம்மா மழை ?..

where_rain1.jpg


FOR TAMIL E-BOOKS

ஏப்ரல் 26, 2007

plz check this

http://www.chennailibrary.com/ebooks/ebooks.html


எனக்கு பிடித்த சில கவிதை வரிகள்

ஏப்ரல் 26, 2007

சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லியிருப்பேன் நானாக
உள்ளுக்குள்ளே பூட்டி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக

- வைரமுத்து.(இயற்கை திரைப்பட பாடலில்)

தெக்க போறதா வடக்க போறதா தெச ஒன்னும் தெரியலயே..

கொல கார பயமக்கா என்ன கொன்னுதான் போடுங்களே – நா.முத்துக்குமார்(வெயில்)


மொழியின் உன்னதம்

ஏப்ரல் 21, 2007

mo.jpgசமீபத்தில் நான் பார்த்த மிக அழகான படம் ‘மொழி’.பன்ச் வசனங்கள்,
ரத்தம்,வன்முறை எதையும் நியாயப்படுத்தாமல் ஒரு தமிழ் சினிமா.அதுவும் உலக தரத்தில்.திரைக்கதையாக இருக்கட்டும்,வசனமாக இருக்கட்டும்,ஜோதிகாவின் நடிப்பாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் உலகத்தரம்.பின்னனி இசை இந்த தொந்தரவு செய்யாமல் நுணுக்கமாக கையாளப்பட்டிருக்கிறது.எடிட்டிங் தரமும் கதையின் போக்கிற்கு உதவியிருக்கிறது.எல்லாவற்றிலும் மொழி தமிழ் சினிமாவின் தரமான உன்னதமான சினிமா.உலக சினிமாக்களில் இடம் பிடிக்க இனி பல படங்கள் தமிழில் வரும் என்பதில் ஒரு சிறிய நம்பிக்கை.


under progress

மார்ச் 8, 2007

என் சொர்க்கத்தில் நான் பட்டாம்பூச்சி வேஷம் போட்டேன் …
–under progress


காயத்தழும்பு

மார்ச் 8, 2007

கண்ணை உறுத்தும்

காயத்தழும்பு..

கவனமாய் நடக்கச்சொல்கிறது


ஹைக்கூ

மார்ச் 7, 2007

கண்ணீர் வழிந்து,

காய்ந்துபோன தடத்தில்

முத்தங்கள் வழிநெடுக..
1932-ray-tears.jpg


rajK – ன் உலகம்

மார்ச் 5, 2007

கடந்த சில மாதங்களாக எனக்கு தனிமையாக இருப்பது பொன்ற ஒரு உணர்வு . ஏன் என்று யோசித்த போது பல காரணங்கள் கண் முன் வந்து சென்றன.முதல் காரணம் கண்டிப்பாக வேளைப்பளு. எனது மனதுக்கு பிடித்த விசயங்களில் எனது நேரத்தை செலவிட இயலவில்லை. இப்பொழுதெல்லாம் எதையோ இழப்பது போன்ற பிரம்மை.அதனால் தனிமையில் இருக்கும் போது என்னுள் எழும் எண்ண்ங்களை, உணர்வுகளை பகிற எனக்கு ஒரு வடிகால் தேவை என்ற எண்ணம்.அதற்கு உதவும் என்ற நம்பிக்கையில் இந்த வலைப் பின்னல்.தமிழை கொலை செய்யாமல் எனக்கு தெரிந்த மொழி நடையில் என் கட்டுரைப் பயணத்தை தொடர்கிறேன.