சமீபத்தில் நான் பார்த்த மிக அழகான படம் ‘மொழி’.பன்ச் வசனங்கள்,
ரத்தம்,வன்முறை எதையும் நியாயப்படுத்தாமல் ஒரு தமிழ் சினிமா.அதுவும் உலக தரத்தில்.திரைக்கதையாக இருக்கட்டும்,வசனமாக இருக்கட்டும்,ஜோதிகாவின் நடிப்பாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் உலகத்தரம்.பின்னனி இசை இந்த தொந்தரவு செய்யாமல் நுணுக்கமாக கையாளப்பட்டிருக்கிறது.எடிட்டிங் தரமும் கதையின் போக்கிற்கு உதவியிருக்கிறது.எல்லாவற்றிலும் மொழி தமிழ் சினிமாவின் தரமான உன்னதமான சினிமா.உலக சினிமாக்களில் இடம் பிடிக்க இனி பல படங்கள் தமிழில் வரும் என்பதில் ஒரு சிறிய நம்பிக்கை.